கிழக்கு தொடருந்து மார்க்கங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
அரசாங்கத்தினால் கிழக்கு புகையிரத மார்க்கங்களில் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக இன்று (07) முதல் தொடருந்து சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இதற்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் காட்டு யானைகளின் வளத்தை பாதுகாப்பதுக்காக இன்று தொடருந்து திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான புதிய தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நடைமுறைக்கு வரும் திட்டம்
இதற்கு அமைய வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் இருந்து பாடுமீன் கடுகதி தொடருந்து 6:15 இற்கு புறப்பட்டு கொழும்பை பிற்பகல் 3:30 இற்கு சென்றடையும்.
மட்டக்களப்பில் இருந்து புலத்தசி தொடருந்து சேவை நள்ளிரவு 1.30 புறப்பட்டு கொழும்பை மறுநாள் காலை 10 மணியளவில் சென்றடையும். கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புலத்தசி பிற்பகல் 3:15 இற்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் மட்டக்களப்பை வந்தடையும்.
பொதுமக்களுக்கான அறிவித்தல்
இதுவரை காலமும் 7 மணிக்கு புறப்பட்ட மட்டக்களப்புக்கான பாடுமீன் கடுகதி தொடருந்து இன்றிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:30 அளவில் மட்டக்களப்பை வந்தடையும். ஏனைய இணைப்பு சேவைகளில் எது வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
எனவே புகையிரதத்தில் பயணிக்கும் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு தொடருந்து திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


