மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய பாடசாலை தூண்கள்
கல்முனை(kalmunai) வலயத்திலுள்ள காரைதீவு இராமகிருஷ்ணா மிசன் (RKM) பெண்கள் பாடசாலை கட்டடத்தின் தூண்கள் தூர்ந்து, தளங்கள் மோசமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட வகுப்புக்களை, தற்போது ஒன்று கூடல் மண்டபத்திலும் ஏனைய இடங்களிலும் இடம் மாற்றம் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அச்சுறுத்தலாக மாறிய சுவர்கள்
இந்த நிலையில், குறித்த பாடசாலை கட்டடமானது, 90/25 நீள அகலமுள்ள மூன்று மாடிக்கட்டடத்தை கொண்டதுடன், இதில் முதலிரு தளங்களில் 08 வகுப்புக்கள் காணப்படுகின்றன.
சுமார் 240 மாணவிகள் கல்வி கற்று வருவதுடன், கீழ்த்தளத்தில் அதிபர் அலுவலகம் உள்ளிட்ட நிர்வாக அலகு இயங்கி வந்துள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த கட்டடத்தின் தூண்கள் தூர்ந்து, தளங்கள் மோசமாக காணப்பட்டுள்ளது. மேலும் கட்டடம் இடிந்து விழுமானால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பலி கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹசந்தியினால், கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரச்சினைக்கான தீர்வினை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |