கல்முனை அபிவிருத்தி குறித்து சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக அங்கீகரிக்கப்பட்ட சில அவசர வேலைத்திட்டங்களுக்கான நகல் வரைவுகளை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரமவிடம் சமர்க்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
குறித்த முன்மொழிவில், வாகன நெரிசல்மிக்க சாய்ந்தமருது நகரில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக அங்கு வாகனத்தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கும், கல்முனை மாநகரில் வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பை அமைப்பதற்குமான நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்முனை மாநகர மற்றும் மாளிகைக்காடு கடல் பகுதிகளில் கரைவலை கடற்தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற கற்கள் மற்றும் கழிவுகளை அகற்றல், கல்முனை மேல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்டத்தரணிகளுக்கான நூலகத்தை டிஜிற்றல் மயப்படுத்தல், கல்முனை மாநகரில் உள்ளூர் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக தற்காலிக விற்பனை கூடங்களை அமைத்தல் போன்றவை உள்ளிட்ட கோரிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |