காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி! பொலிஸார் விசாரணை

Galle Sri Lanka Police Investigation Crime Prison
By Laksi Jan 09, 2025 02:30 PM GMT
Laksi

Laksi

காலி (Galle) சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட தொலைபேசிகள் அடங்கிய பொதி ஒன்றை சிறைச்சாலை காவலர்கள் கைப்பற்றி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காலி சிறைச்சாலையின் பின்புற மதிலுக்கு மேலாக பொதியொன்று சிறைச்சாலைக்குள் வந்து விழுவதை அந்தப் பகுதியில் காவலுக்கு நின்றிருந்த சிறைக்காவலர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சிறைச்சாலை காவலர்கள் குறித்த பொதியை கைப்பற்றி பிரித்துப் பார்த்த ​போது, அதற்குள் ஐந்து மொபைல் போன்கள், மூன்று சார்ஜர்கள், நான்கு லைட்டர்கள் மற்றும் முப்பது புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

மேலதிக விசாரணை

பொதியை வீசியெறிந்த நபர் குறித்தும், அதனைப் பெற்றுக் கொள்ள இருந்த நபர் குறித்தும் தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி! பொலிஸார் விசாரணை | Phone Parcel Thrown Into An Galle Prison

அத்துடன் கைப்பற்றப்பட்ட பொதி, மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

சம்மாந்துறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

சம்மாந்துறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW