சம்மாந்துறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
அம்பாறை (Ampara)- சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மாந்துறை (Sammanthurai) ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை குறித்த அதிகாரிகள் குறித்த சோதனையிட்டனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, 41 வயது மற்றும் 34 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களிடமிருந்து 4000 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரணதுங்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான சார்ஜன் அநுர, சார்ஜன் அசோக்க உள்ளிட்ட அதிகாரிகளாலும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |