பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Podujana Peramuna Petrol diesel price Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 05, 2024 05:21 AM GMT
Laksi

Laksi

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

பெட்ரோலின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

மேலும், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல் | Petrol Price In Sl May Increase To 5000 Rupees

இந்த குழு பல நாட்களாக கூடி கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு மூட்டை உரம் 50,000 ரூபாவாகவும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் வலியுறுத்தியுள்ளார்.

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி முடிவு

பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW