முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

Athaullah A L M Sri Lanka Politician Sri Lanka Parliament Election 2024
By Rakshana MA Dec 11, 2024 09:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி தேசிய காங்கிரஸின் தலைவரான  ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்(ALM Athaullah) மனு கொடுத்துள்ளார்.

குறித்த மனு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் நேற்று(10) கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கி வைப்பு

மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கி வைப்பு

கொடுக்கப்பட்ட மனு

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு சென்று இன்று குறித்த மனுவை கையளித்துள்ளதுடன் குறித்த மனுவில் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல தரப்பினரிடம் தேசிய காங்கிரஸ் தலைவராக சென்று கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு | Petition Given By Former Mp Athaullah

இதே வேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை தனக்கு தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கைளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மறுக்கப்பட்ட வாக்குகள்

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு | Petition Given By Former Mp Athaullah

மேலும் நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery