கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jul 30, 2024 10:40 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலாக மீட்கப்பட்டவர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு வந்திருந்த நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

முரண்பாடு

இதன்போது, குறித்த இடத்திற்கு குளிப்பதற்காக வருகைத் தந்த மற்றுமொரு குழுவினருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு | Person Went To Bathe In Kala Oya River Was Killed

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவர் தவிர்ந்த ஏனைய குழுவினர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தப்பிச் சென்ற குழுவினர், சடலமாக மீட்கப்பட்டவரைத் தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் நேற்று பொலிஸார் மற்றும், உயிரிழந்தவரின் நண்பர்களும் கலா ஓயாவின் இருபுறமும் தேடிய போது கலா ஓயா ஆற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

பொலிஸார் விசாரணை

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டடவர் வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த எச்.எம். வசந்த பிரியதர்ஷன (வயது 47) திருமணமாகாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு | Person Went To Bathe In Kala Oya River Was Killed

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுவாங்குளம் பகுதியில் உள்ள சுற்றுலா பங்களாவை திருத்துவதற்காக வருகைத் தந்ததாகவும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW