ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka
By Sivaa Mayuri Oct 11, 2024 12:42 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

பல்வேறு நிகழ்வுகளுக்காக ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை நினைவுப் பலகைகளில் அல்லது கொண்டாட்டப் பகுதிகளில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர், அனைத்து அரச நிறுவனங்களும் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர்  நந்திக சனத் குமாநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

அரசாங்கத்தின் நிதியுதவி 

அத்துடன், அரசாங்கத்தின் நிதியுதவி நடவடிக்கைகள், அரசின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை | Permission To Display Photographs Of The President

இந்த அறிவித்தல், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபை தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW