பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 23, 2024 08:13 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ்(N.M.Nawfees) மற்றும் அதிகாரிகள் சகிதம் அங்கு விஜயம் செய்து, மண்டபத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

கலாசார மண்டபம்

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் இரு மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கலாசார மண்டபத்தில் மாநாடுகள், கூட்டங்கள், கலை, கலாசார விழாக்கள் மற்றும் பொது மக்களின் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஏற்றவாறு குறைந்த சேவைக் கட்டணத்தில் பண்டப அனுமதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு | Periya Neelavanai Cultural Hall For Public Use

இக்கலாசார மண்டபத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இங்கு கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery