சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும் : ரிஷாட் உறுதி

Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 13, 2024 10:20 AM GMT
Rukshy

Rukshy

சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்?” என்பது தொடர்பில், கடந்த 10,11,12ஆகிய தினங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற, மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்களின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

கைத்தொழில் மேம்பாடு

தொடர்ந்து பேசிய அவர், “தலைமையுடன் நட்பையும் உறவுகளையும் கொண்டிருப்பதைக் காரணமாக வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முடியாது.

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும் : ரிஷாட் உறுதி | People S Congress Decisions Keeping Social Welfare

சுமார் நான்கரை வருடகால ஆட்சியில் நமது சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை நாம் மறந்துவிட முடியாது. அதேபோன்று, எதிர்க்கட்சியில் நாம் இருந்தவேளை, கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தலைமைக்கும் ஏற்படுத்திய துன்பங்கள் மறக்கமுடியாதவை. 

நாட்டின் பொருளாதாரத்தை சீரிய முறையில் முன்கொண்டு செல்பவராகவும் கைத்தொழில் மேம்பாட்டில் அக்கறைகொண்டவராகவும் நாட்டின் எதிர்காலத் தலைவர் இருக்க வேண்டும்.

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும் : ரிஷாட் உறுதி | People S Congress Decisions Keeping Social Welfare

அத்துடன், முறையான வெளிநாட்டுக் கொள்கையை அவர் பின்பற்ற வேண்டும். பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோட்பாட்டையும் எதிர்காலத் தலைமை மேற்கொள்ள வேண்டும். இவற்றைதான் நமது கட்சி முன்வைக்கிறது. 

அதுமட்டுமின்றி வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிராமல், இதனை முடிவுக்குக்கு கொண்டுவரும் ஒருவரை நாம் அடையாளப்படுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானது“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்! கிடைத்துள்ள அனுமதி

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்! கிடைத்துள்ள அனுமதி

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery