திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Trincomalee Anura Kumara Dissanayaka Sri Lanka SL Protest Eastern Province
By Laksi Dec 11, 2024 07:20 AM GMT
Laksi

Laksi

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி, திருகோணமலை (Trincomalee) நகரில் இன்று(11) மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை கிழக்கு மாகாண அகம் மனிதாபிமான வளநிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற உரிமை ரீதியான பிரச்சினைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டதாக AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

பிரச்சார பேரணி

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு நிறுத்துங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்துங்கள், மீள நிகழாமையை உறுதிப்படுத்து, கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கு,அரசியல் கைதிகளை விடுதலை செய், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கு போன்ற கோசங்களை எழுப்பியுள்ளனர்.

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | People S Attention Protest In Trincomalee

அத்தோடு, கடற்றொழிலாளர்களுக்கான நிவாரணம் வழங்கு, பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வினை வழங்கு, 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு வேண்டும் என முக்கியமான கோசங்களை கோரியவகையில் பேரணியாக திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னிருந்து ஆரம்பமான பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை சென்றடைந்தது.

நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் சிங்கள ஆகிய மூவின மக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், துறைசார் சிவில் அமைப்புக்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், விவசாயிகள், நிலத்தினை இழந்தவர்கள், மத வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டவர்கள்,கடற்றொழிலாளர்கள், பெண்கள், சிவில் செயற்பாட்டாளர்கள மற்றும் ஊடகவியலாளர்கள்,  அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

ஜனாதிபதி மகஜர்

சர்வதேச மனித உரிமை தினத்தினை ஒட்டிய பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை அடைந்ததும் கிழக்கு மாகாணத்திலுள்ள மேற்கூறிய பாதிப்புக்களைக் கொண்ட மக்கள் தங்களுக்கான பிரச்சினைகளை முன்வைக்கும் மண்டப நிகழ்வு இடம் பெற்றது.

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | People S Attention Protest In Trincomalee

இந்த மண்டப நிகழ்வில் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளுக்கு, தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பான மகஜர் ஒன்றும் பெண் மனித உரிமை பாதுகாவலர் நாகேஸ்வரன் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகள் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ராஜசேகரர்,கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் மதிவண்ணனன,இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் யு.த. இசைதீன், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் AHRC இன் நிறைவேற்று சபையின் செயலாளருமான சட்டத்தரணி தபிரசாந்தினி மயூரன், AHRC இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அழகுராசன் மதன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக பாதிக்கப்பட்டவர்களால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery