முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Rakshana MA Feb 15, 2025 04:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோருக்கு பெப்ரவரி மாதத்தில் 3000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம்(2024) நவம்பர் முதல், அஸ்வெசும நலன் பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்காக நலன்புரி நன்மைகள் சபை ஊடாக நேரடியாக SLIPS முறை மூலம் அஸ்வெசும கணக்குகளில் குறித்த உதவித்தொகை வரவு வைக்கப்படும் என சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய வானிலை அறிவிப்பு

நிலுவையில் உள்ள கொடுப்பனவு

அதன்படி, அஸ்வெசும குடும்பங்களில் உள்ள முதியவர்களை தவிர்த்து, இதுவரை உதவித்தொகை பெற்று வரும் முதியவர்களுக்கு மட்டுமே தபால்/உப தபால் அலுவலகங்கள் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் | Pension Payment Scheme Benefit Announcement

இருப்பினும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக, கடந்த காலத்தில் குறிப்பிட்ட திகதியில் முதியவர்களுக்கு உதவித்தொகையை செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி முதல் தபால்/ உப தபால் அலுவலகங்கள் மூலம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள நம்பிக்கை

விவசாயிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள நம்பிக்கை

மத்திய வங்கியில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய வங்கியில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW