விவசாயிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள நம்பிக்கை
நாட்டிலுள்ள விவசாயிகளிடம் இருந்து உத்தரவாத விலையின் அடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் விற்பனை சபையின் தலைவர் மஞ்சுள பின்கந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில், 675 கிலோ கிராம் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. அத்துடன், இன்னமும் நெல் விளைச்சல் அதிகளவில் சந்தைக்கு வரவில்லை.
உத்தரவாத விலைக்கு நெல்
எதிர்வரும் நாட்களில் விவசாயிகள் அரசாங்கத்திடம் நெல்லை விற்பனை செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், விவசாயிகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நெல்லை விற்பனை செய்யாது தனியாருக்கு விற்பனை செய்வதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |