24 மணிநேரமும் விநியோகிக்கவுள்ள கடவுச்சீட்டு

Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration Passport
By Rakshana MA Feb 05, 2025 04:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணிநேரமும் இயங்கச் செய்து நாளொன்றுக்கு 4,000 கடவுசீட்டுக்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு பற்றாகுறைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவையால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வெற்றுக் கடவுச்சீட்டு

கொள்வனவு குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, அரசாங்கம் ஏற்கனவே 1.1 மில்லியன் வெற்றுக் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளது.

24 மணிநேரமும் விநியோகிக்கவுள்ள கடவுச்சீட்டு | Passports To Be Distributed 24 Hours A Day

இந்நிலையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒப்புதலுடன் அரசாங்க அதிகாரிகள் தற்காலிகமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் உள்வாங்கப்படவுள்ளனர்.

கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் முகங்கொடுக்கும் துயரங்களை கடந்த மாத இறுதியில் எமது லங்காசிறி ஊடகம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

77ஆவது சுதந்திர தினம் இன்று..

77ஆவது சுதந்திர தினம் இன்று..

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW