77ஆவது சுதந்திர தினம் இன்று..

Independence Day Sri Lanka
By Benat Feb 04, 2025 04:35 AM GMT
Benat

Benat

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. 

தேசிய சுதந்திர தின நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு  சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.  


இந்த நிகழ்வில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சமய தலைவர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் தேசிய தின கொண்டாட்டங்கள் இன்று விமர்சையாக இடம்பெற்று வருகின்றன. 

மாத்தளை