பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

Vavuniya General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 05, 2024 11:12 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் தெரிவித்துள்ளார்.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவுசெய்துள்ளனர்.கடந்த காலங்களில் தமிழ்த்தேசியம் என்ற நிலைமையினை தக்கவைத்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

மக்களின் வாக்குகள்

இன்று தமிழ்த்தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர். பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு | Parliamentary Elections Eros Announced

எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW