அதிரடியாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
Crime
MP Chamara Sampath Dassanayake
By Rakshana MA
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்வதற்கு முன்னர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |