இலாஹியா ஜும்மா மஸ்ஜித் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு
திருகோணமலை, கந்தளாய் பேராறு இலாஹியா ஜும்மா மஸ்ஜித் ஏற்பாட்டில் வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்று (26) பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.
இனங்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வில், பல்வேறு சமூகத்தினரும் கலந்துகொண்டு ஒன்றுபட்ட உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்தார் நிகழ்வு
இதனை தொடர்ந்து, இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு தலைவர்கள் உரையாற்றியுள்ளதுடன், "இப்தார் சிந்தனை" குறித்த விசேட சொற்பொழிவை மௌலவி அஜ்மல் வழங்கியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரச திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளர்களாக பிராந்திய முப்படைத் தலைவர்கள், கந்தளாய் மருத்துவமனை முகாமையாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






