கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Hospitals in Sri Lanka Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 28, 2024 11:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை (Kalmunai) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா (A. Aathambawa) திடீர் விஜயம் செய்துள்ளார். 

நேற்று (27) மாலை இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வைத்தியசாலையின் ஒரு பிரிவுக்கான இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு விடையளிக்கும் முகமாக துரித கதியில் அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் 

மேலும், வைத்தியசாலையின் சுற்றுச்சூழலை அதிகாரிகள் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ரகுமானுடன் சென்று பார்வையிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியசாலையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை தெளிவுபடுத்தினார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் | Parliament Member Athambawa Visit Ashraff Hospital

மேலும், இதன் போது குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட அவர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார்.

பின்னர் அங்கு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுகமக்களிடம் சிநேக பூர்வமாக உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இத்திடீர் விஜயத்தினை அடுத்து வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில்

ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery