பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

Ampara Risad Badhiutheen Eastern Province
By Laksi Dec 27, 2024 07:46 AM GMT
Laksi

Laksi

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக்கின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மர்ஹூம் இஸ்ஹாக்கின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

பல்துறை செயற்பாடு

மேலும் கூறியுள்ளதாவது, "தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில் நன்கு அறிந்திருந்தவராகவும் மர்ஹூம் இஸ்ஹாக்  இருந்துள்ளார்.

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம் | M Ishaq Death Is Worrying Rishad Sympathizes

பல்வேறு சர்வதேச கற்கைகளையும் அதேபோன்று, இலங்கைக்குள்ளும் பல்துறை செயற்பாடுகளுடன் பயணித்த ஒரு நல்லுள்ளம் கொண்டவராகவும் இவரை அடையாளப்படுத்த முடியும்.

சவூதி அரேபியாவில் நீண்டகாலம் பணிபுரிந்த நிலையில், கிழக்கில் வீடமைப்புத் திட்டத்தினை வறிய மக்களுக்காக சவூதி அரேபியாவின் உதவியுடன் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஆழ்ந்த அனுதாபங்கள்

இதேபோன்று, கிழக்கிலங்கையில் அரபு பல்கலைக்கழத்தின் தேவை உணர்ந்து, அதனது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர். மிகவும் அன்பாகப் பழகும் சிறந்த பண்புகளைக் கொண்டவர்.

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம் | M Ishaq Death Is Worrying Rishad Sympathizes

புனித உம்ராக் கடமையை நிறைவு செய்ய மக்கா சென்றிருந்த வேளை, இந்த மரணம் சம்பவித்துள்ளமை ஆழ்ந்த கவலை தருகின்றது.

அன்னாரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது இழப்பால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW