பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 29, 2024 06:18 AM GMT
Mayuri

Mayuri

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் முப்படை முகாம்களிலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

வாக்களிக்க சந்தர்ப்பம்

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு | Parliament Election In Sri Lanka

இதனிடையே, பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவி்ப்பு

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவி்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW