எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவி்ப்பு
சந்தையில் நிலவும் லாஃப் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, தற்போது நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் லாஃப் (Laughs) எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக Laughs Gas நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைமை காரணமாக லாஃப் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லாஃப் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்
எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |