தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Election Local government Election General Election 2024
By Laksi Sep 30, 2024 08:53 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரசாங்க அச்சக அதிகாரி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மொத்தம் ஒரு மில்லியன் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஒரு பகுதி நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீதமுள்ளவை இன்று வழங்கப்பட உள்ளன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

அச்சிடும் பணிகள்

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வாக்குச் சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் உட்பட நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் நடவடிக்கைகளும் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் குறித்து வெளியான தகவல் | Parliament Election In Sri Lanka

சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்ததும் அக்டோபர் 11 ஆம் திகதிக்குப் பின்னர் மீதமுள்ள அச்சிடும் பணிகள் தொடங்கும்.

2024ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW