இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை- கண்டிக்கும் ஐக்கிய நாடுகள்

Israel World Gaza
By Rakshana MA Mar 22, 2025 04:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

துருக்கிய - பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை இஸ்ரேல் அழித்தமையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

இந்த மருத்துவமனை துருக்கியால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளூர் அதிகாரிகளால் புற்றுநோய் சிகிச்சை மையமாக இயக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளின் பேச்சாளர்; ஃபர்ஹான் ஹக், ஒரு மருத்துவ உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் ஐக்கிய நாடுகள் நிச்சயமாக எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

தாக்குதல் 

எந்தவொரு தரப்பினராலும் மருத்துவ உள்கட்டமைப்பு மீதான அனைத்து தாக்குதல்களும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை மேற்கோள் காட்டி – அவை சாத்தியமான போர்க்குற்றங்கள் என்றும், துன்பப்படும் மக்களுக்கு சகிக்க முடியாத சூழ்நிலை என்றும் ஹக் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை- கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் | Palestinian Health Ministry Condemns Israel Attack

2023 அக்டோபர் 7 ஆம் திகதியன்று காசாவில் இனப்படுகொலை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை முறையாக குறிவைத்துள்ளது.

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், இது ஜனவரி முதல் நடைபெற்று வந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முறித்துள்ளது.

இந்தநிலையில் 2023 அக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களில்; கிட்டத்தட்ட 50,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேலும் 112,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை- கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் | Palestinian Health Ministry Condemns Israel Attack

இதேவேளை, கடந்த நவம்பரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது பிடியாணைகளை பிறப்பித்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை திடீர் பரிசோதனை

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை திடீர் பரிசோதனை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW