தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை திடீர் பரிசோதனை
தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள உணவு உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுற்றிவளைப்பு செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையானது, நேற்று (19) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத் தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராகவும், இரண்டு உணவகங்களுக்கு எதிராகவும் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தண்டப்பணம்
குறித்த உரிமையாளர்களை சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது ரூபா 30 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறித்த சிற்றுண்டிச்சபலைகள் சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாகவே இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


