சுற்றுலாப்பயணிகளின் வருகையில் பதிவான மாற்றம்

Rakshana MA
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை
இந்நிலையில், பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 25,293 பேரும், ரஷ்யாவிலிருந்து 22,280 பேரும் பிரித்தானியாவிலிருந்து 18,785 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,393 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்குள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |