100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பில் வெளியான பின்னணி

Sri Lanka Sri Lanka Police Investigation Public Health Inspector
By Rakshana MA Feb 08, 2025 05:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய பல உயர் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொலிஸார் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவை பொலிஸ் சிறப்புப் படையின் புதிய தளபதியாக நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

எனினும், தற்போது அந்தப் பதவியில் பணியாற்றும் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

பொதுப் பணிகளுக்கு..

இந்த நிலையில், பொதுப் பணிகள் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றும் அஜித் ரோஹண, வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றும் கித்சிரி ஜெயலத், தென் மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றும் மகேஷ் சேனாரத்ன ஆகியோர் ஊவா மாகாணத்திற்கு இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பில் வெளியான பின்னணி | Over 100 Officers Transferred

மேலும், இதற்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் பல பொலிஸ் நிலைய அதிகாரிகள், தங்கள் நிலைய அதிகாரிகள் பதவியை இழந்து, பொதுப் பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு கலவையில் ஆபத்து விளைவிக்கும் கூறு : நாடாளுமன்றில் தகவல்

நீர் சுத்திகரிப்பு கலவையில் ஆபத்து விளைவிக்கும் கூறு : நாடாளுமன்றில் தகவல்

வீழ்ச்சியடைந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!

வீழ்ச்சியடைந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW