நீர் சுத்திகரிப்பு கலவையில் ஆபத்து விளைவிக்கும் கூறு : நாடாளுமன்றில் தகவல்
நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் நீரேற்றப்பட்ட கலவைச் சரக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் குரோமியம் அளவுகள் இருப்பதாக, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்;, நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் கல்சியம் சேர்மமான நீரேற்றப்பட்ட கவவை மாதிரிகளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியாளர்கள ஆய்வு செய்து இறக்குமதி செய்வதற்கு முன் குரோமியம் உள்ளடக்கத்தை சோதிக்க வேண்டும்.
குரோமியம் அளவு ஒரு கிலோவிற்கு 10 மில்லிகிராமுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையில் உள்ள ஆய்வகத்தில் மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன..
எனினும் கடந்த இரண்டு வாரங்களில், 550 மெட்ரிக் தொன்; நீரேற்றப்பட்ட கலவையைக் கொண்ட 27 கொள்கலன்களில், பாதுகாப்பு வரம்பை விட அதிகமான குரோமியம் அளவுகள் இலங்கைக்கு வந்ததாக சானக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், இறக்குமதி தளத்திலும் இலங்கை ஆய்வகத்திலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு கிலோவிற்கு 14 மில்லிகிராம் குரோமியம் உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது 10 மில்லி கிராம் என்ற பாதுகாப்பு வரம்பை தாண்டியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வரம்பை மீறிய போதிலும் இந்த இறக்குமதிகள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாகன கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்து
புற்றுநோயை உண்டாக்கும் குரோமியம் அளவுகள் இருப்பது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் வருவதற்கான அபாயங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இந்த பாரிய பிரச்சினைக்கு பின்னால் யார் செயற்படுகிறார்கள் என்பது கண்டறியப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வர்த்தக, வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பதில் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |