வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விடுதலை

Sri Lanka Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran Aug 07, 2024 09:51 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

நீதிமன்றம் உத்தரவு

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விடுதலை | Order Issued By The Court To Doctor Archuna

இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கையில் விலங்கிடப்பட்ட நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்தார் இதனையடுத்து, வைத்தியர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட குடும்பஸ்தரின் வீடு

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட குடும்பஸ்தரின் வீடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW