பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்

Pakistan India World
By Rakshana MA May 07, 2025 01:03 PM GMT
Rakshana MA

Rakshana MA

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஒப்பரேஷன் சிந்தூர்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று (07) அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஒப்பரேஷன் சிந்தூர்

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேணல் சோபியா குரேஷி, விங் கொமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஒப்பரேஷன் சிந்தூர் எப்படி நடத்தப்பட்டது என்று விளக்கியுள்ளனர்.

எந்தெந்த பயங்கரவாத முகாம்களில் எந்தெந்த பயங்கரவாதிகள் குறிவைக்கப்பட்டனர் என்று அவர்கள் விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.

சோபியா குரேஷி பேசுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒப்பரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இரவு 1.05 முதல் 1.30 வரை ஒப்பரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது.

காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

தாக்கப்பட்ட இடங்கள் 

ஒப்பரேஷன் சிந்தூர் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டன. நாங்கள் சாதாரண குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம் | Operation Sindoor Today Video

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பான வீடியோவும் இந்த சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது.  

ஊருக்குள் புகுந்த 6அடி முதலை : மக்கள் முன்னெடுத்த செயல்

ஊருக்குள் புகுந்த 6அடி முதலை : மக்கள் முன்னெடுத்த செயல்

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW