மத்திய முகாமில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு வைப்பு
மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தை இன்று (07) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகீலா இஸ்ஸதீன் திறந்து வைத்துள்ளார்.
அத்தோடு, வைத்தியசாலைக்கு தேவையான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கான சேவை
இந்தநிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.எம்.மாஹிரும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். சாபியும் விசேட அதிதிகளாக பங்குபற்றியதுடன் விசேட உரைகளையும் நிகழ்த்தினர்.
இதன்போது, பற்சிகிச்சை பிரிவின் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க குழுவினருடன் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு, வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான சேவையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்தநிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |