வாழைச்சேனையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணை
நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


