கல்கிஸ்சையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

Police spokesman Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Rakshana MA Jan 07, 2025 04:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்கிஸ்சை(Galkissa) – வட்டரப்பல பகுதியில் இன்று(07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க(Budhdhika Manathunga) தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது

சம்மாந்துறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது

துப்பாக்கிச்சூடு

அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர் 36 வயதுடைய கல்கிஸ்சை வட்டரப்பல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், 20 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கிஸ்சையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு : இருவர் பலி | One Person Died In Galkissa Firing

எனினும் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், தொடர்ந்தும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்!

அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW