முதியவர் ஒருவரின் மோசமான செயல்! சம்மாந்துறையில் கைது
சம்மாந்துறை(Sammanthurai) - வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் ஒருவர் 9 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக தெரிவித்து சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் 9 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், குறித்த முறைப்பாட்டுக்கமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியைத்தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீரமுனைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அம்பாறை பிரதேசத்தைச்சேர்ந்த (வயது 69) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |