சிக்கியுள்ள பொலிஸ் அதிகாரி தலைமையிலான கொள்ளை கும்பல்

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Rakshana MA Jan 14, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் கழுத்தில் இருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கொள்ளையிடப்பட்ட தங்கப் பொருட்கள் மற்றும் தங்கப் பொருட்களை விற்பனை செய்த பணத்துடன் கைது செய்யப்பட்டுளு்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட குழுவினருக்கு, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

மேலதிக விசாரணை 

மேலும், முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நகையை உடைப்பதாக ஹங்வெல்ல பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஆதரவுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைது செய்வதற்காக தும்மோதர, பங்னகுல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சிக்கியுள்ள பொலிஸ் அதிகாரி தலைமையிலான கொள்ளை கும்பல் | Robbers Lead By A Police Officer Is Trapped

இதன்படி, குறித்த வீட்டை சோதனையிட்ட போது சந்தேகநபர் மற்றும் இருவர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தனது உறவினருடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களில் நகையை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், முன்னாள் கான்ஸ்டபிளின் இளைய சகோதரனே தங்க பொருட்களை அடகு வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புதிய வரி சதவீத அறிவிப்பால் வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு

புதிய வரி சதவீத அறிவிப்பால் வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW