மன்னாரில் தாய் - சேய் மரணத்திற்கான விசாரணைகள் ஆரம்பம்
மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு ஒன்றினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்து குறித்த குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் (Mannar) பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு வடமாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |