களுவாஞ்சிக்குடியில் தாதி உத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று(17) தாதியர்கள் பாதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது என்? உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்று நண்பல் 12.30 மணியளவில் வைத்தியசாலையின் நிருவாக சேவைகளுக்கும், வைத்தியசேவைகளுக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு இவ்வாறு தாதி உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் செயலாளர் ஏ.ஜி.எம்.நசூஹான், அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வ.புவிதர், உள்ளிட்ட தாதியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





