தாதியர்களின் ஓய்வு வயது குறித்து வெளியாகியுள்ள சுற்றறிக்கை
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 இலிருந்து 60 ஆகக் குறைப்பதன் காரணமாக, எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால், நாட்டில் தற்போது நிலவியிருக்கும் தாதியர் பற்றாக்குறை நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
கட்டாய ஓய்வு வயது
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், வழக்கின் இறுதி தீர்ப்பு வரை மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை தொடர்ந்து, 2025 மார்ச் 4ஆம் திகதி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள நிலவரத்தில் தாதியர் கடுமையாக குறைவாக உள்ள நிலையில், இந்த ஓய்வூதிய மாற்றம் மேலும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்ற அரச தாதியர் சங்கம் பல்வேறு சமுதாய ஆராய்ச்சிகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |