பாடசாலை கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த மாணவி
கொழும்பில் பாடசாலை கட்டிடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் மருத்துவமனை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பந்தப்பட்ட மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், உயிரியல் வினாத்தாள் வழங்கப்படுவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவி காபற் பாதையில் விழுந்ததாக காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |