பௌர்ணமி போன்று பிரகாசிப்பவர்

Islam
By Fathima Nov 11, 2025 09:07 AM GMT
Fathima

Fathima

ஹஜ்ரத் அபத்தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ”ஓர் அடியான் லாஇலாஹ இல்லல்லாஹ் நூறு தடவை கூறினால் அவரை அல்லாஹ் கியாமத்து நாளில் பௌர்ணமி நிலவைப் போன்ற ஒளி முகமுடையவராக எழுப்புவான். இவ்வாறு அவர் ஓதிய நாளில் அவரைப்போன்று அல்லது அவரைவிட அதிகமாக ஓதியவரை தவிர மற்ற எவருடைய அமலும் சிறப்பிற்குரியதாக ஆகாது என நபிகள்(ஸல்) அவர்கள் அருளினார்கள்.

லா இலாஹ இல்லல்லாஹ் கலிமா இதயத்தையும், வதனத்தையும் ஒளிமயமாக்கக் கூடியதாக இருக்கிறது என்ற கருத்து பல ஆயத்துகளின் மூலமும் பல ஹதீஸ்களின் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலிமாவை அதிகமாக ஓதிவரும் பெரியார்களின் முகங்கள் இவ்வுலகிலேயே ஒளியால் இலங்கிக் கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.

பௌர்ணமி போன்று பிரகாசிப்பவர் | La Ilaha Illallah