அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க துரித இலக்கம்
எதிர்வரும் நாட்களில் பலத்த மழையினால் திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காகச் சகல மாவட்டங்களிலும் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகள் தொடர்பான விடயங்களை, 24 மணி நேரமும் இயங்கும் 117 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு மும்மொழிகளிலும் அறிவிக்க முடியும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அவசர அழைப்பு
தற்போது எவ்விதமான அனர்த்தங்களும் பதிவாகவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் போது, அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |