சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Puttalam
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Rakshana MA
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, இன்று (18) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |