புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்

By Rakshana MA May 17, 2025 11:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இலக்கத்தகடுகள் வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பில் கூறுகையில், இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

புதிய இலக்க தகடு 

புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய இலக்க தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல் | Number Plates For New Motor Vehicles In Srilanka

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.   

தனியாக ஆட்சி அமைப்பது கடினமான விடயம்.. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

தனியாக ஆட்சி அமைப்பது கடினமான விடயம்.. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

தொடருந்து சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

தொடருந்து சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW