ஜனாதிபதியின் நியமனங்களில் குளறுபடிகள்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களிலும் குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் வழக்கு
நியமிக்கப்பட் சிலரது நடத்தைகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்பட்டவர்கள் எனவும், சிலருக்கு ஏதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது தற்பொழுது தேசயி மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற 42 வீத வாக்குகள் குறைவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை அப்படியே முன்னெடுக்கக் கூடிய நபர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றார்கள் எனவும், அநுரகுமார என்றால் ரணில் எனவும் ரணில் என்றால் அநுரகுமார எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |