தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்
திருகோணமலை மாவட்டத்தின் 13 ஊராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி நேற்று (19)வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையின் கீழ், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாநகர மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம, திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் , சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர, கோமராங்கடவெல ஆகிய பிரதேச சபைளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
வேட்பு மனு தாக்கல்
மேலும், பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி மகத்தானது. அதே போன்ற ஒரு வெற்றியை, இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆட்சி நிர்வாகத்தை, வினைத்திறனாக கொண்டு செல்லும் ஒரு ஜனாதிபதி, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு சிறப்பான நாடாளுமன்றம், அதேபோன்று நல்ல முற்போக்கான செயல்திறன் கொண்ட ஒரு அமைச்சரவை ஆகியன தற்போது நாட்டில் அமைய பெற்றிருக்கின்றது.
கடந்த காலங்களில், ஊழல், இலஞ்சம் மோசடி போன்றவற்றுக்கு தலைமை தாங்கும், அமைப்பாக உள்ளுராட்சி சபைகள் திகழ்ந்தன.
வக்காளர்கள்
இந்த நிலையில், தேசிய ரீதியில் கிராமங்களை வெற்றிகொண்டு, ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை நாங்கள் வாய்ப்பாக பயன்படுத்துவோம்.
மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த மாவட்டத்தில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதற்கு தேவையான உத்திகளை கையாண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும், 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மாவட்டத்தில் இம்முறை 319,399 வக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
