தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமானது தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
இதேவேளை, மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில்,தேர்தலை முன்னிட்டு 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |