சம்மாந்துறை பொலிஸாரினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Police Eastern Province Crime Sammanthurai
By Rakshana MA Jan 04, 2025 11:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை (Sammanthurai) பகுதியிலுள்ள பொது மக்களுக்கு சம்மாந்துறை பொலிஸாரினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

பொலிஸாரின் அறிவித்தல் 

மேலும், குறித்த அறிவித்தலானது நாட்டில் தற்போது நடைபெற்று வரும் குற்றச்செயல்களை குறைக்கும் முகமாக செயற்படுவதற்காக ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸாரினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Notice Issued By The Sammanthurai Police To Public

அத்துடன், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW