மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

Batticaloa Sri Lanka Eastern Province
By Laksi Jan 03, 2025 10:30 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்ட பெருமளவான பொதுக்கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேசத்தில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (3) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக மாற்றம் கண்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

அதிரடியாக மாற்றம் கண்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

மண்டபம் திறப்பு

கடந்த மாகாணசபை ஆட்சிக் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலையின் ஏற்பாட்டிலும் குறித்த ம்ண்டபம் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாத நிலையில் இருந்தது.

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள் | Number Of Abandoned Public Buildings In Batticaloa

பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்த மண்டபம் இன்றுவரையில் திறக்கப்படாத நிலையில் ஏழு வருடங்களுக்கு பின்னர் இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்

இதன்போது இந்த மண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கையெடுத்த முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை கௌரவிக்கப்பட்டார். 

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள் | Number Of Abandoned Public Buildings In Batticaloa

இந்த நிலையில் புதிய ஆட்சியில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த மண்டபம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery