வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு

By Chandramathi Sep 23, 2024 03:46 PM GMT

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.  

இந்நிலையில், தற்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.  

முன்னதாக வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.